இயலிசை அறிஞர், சிதம்பரம் சி.எஸ்.நடராஜசுந்தரம் பிள்ளை தமிழிசைப் புரட்சிக்குப் பின் தோன்றிய தமிழிசைப் புலவர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் சி.எஸ்.நடராஜசுந்தரம் பிள்ளை ஆவார். இவரது பாடல்கள் இனிமையும், கருத்துச் செறிவும் உடையதாக விளங்குகிறது. இவரைப் பற்றியும், இவர் பாடல்களின் சிறப்பைப் பற்றியும் அறிந்து போற்றுவது நம் கடமையாகும். சிதம்பரத்தில் வாழ்ந்த தலைச்சிறந்த பரத நாட்டிய வித்வான், தமிழ்ப்புலவர் சாமிநாதப் பிள்ளை - சுந்தரவல்லி என்போரின் இரண்டாவது குமாரராக கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி பராபவ வருடத்தில் நடராஜசுந்தரம் பிறந்தார். இவரது சகோதரர் மூத்த குமாரர் சி.எஸ்.செல்வரெத்தினம் பிள்ளையாவார். இவர் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், கதாகாலட்சேபம், நடிகராகவும் புகழ் பெற்றவர். நடராஜசுந்தரம் அவர்கள் தனது சிறிய தகப்பனார், கும்பகோணம் மிருதங்க வித்வான் சா.பக்கிரிசாமிப் பிள்ளை வீட்டில் வளர்ந்து அவரிடம் மிருதங்கம் பயின்றார். தனது 28 வது வயதில் சிதம்பரம் ஸ்ரீலஸ்ரீ மகான் லாலா சுவாமிகளை ஆசானாக ஏற்று அருள்பெற்றுப் பல இசைப்பாடல்களைப் பாடினார். இசையுலகில் புகழ்ப்ப...